Thursday, 2024-11-28, 6:49 PM
Welcome Guest | RSS
தமிழ் கல்வி
Section categories
தெரிந்து கொள்ளுங்கள் [2]
புதிர்கள் / பழமொழிகள் [1]
கணணி / இணையம் [0]
உடல் நலன் / மருத்துவம் / பாலியல் [0]
தொழில் நுட்பம் [0]
Statistics

Total online: 1
Guests: 1
Users: 0
Login form
Search
Main » Articles » பொதுஅறிவு தகவல் » புதிர்கள் / பழமொழிகள்

மூளைக்கு வேலை கொடுக்க இதோ சில புதிர்கள்..
1. பதினொன்றோடு இரண்டைச் சேர்ந்தால் ஒன்றாகும். எப்படி?

2. எவ்வளவு முன்னேறுகிறீர்களோ அவ்வளவு விட்டுச் செல்வீர்கள். அது என்ன?

3. தலையிலிருந்து கால் வரை நான் உபயோகப்படுவேன். அதனால் நான் மெலிகிறேன். நான் யார்?

4. இருபத்தைந்தை எவ்வளவு முறை ஐந்தால் கழிக்க முடியும்?

5. இது உங்களை அழ வைக்கும், சிரிக்க வைக்கும், இளமையாக உணர வைக்கும். நொடியில் தோன்றினாலும் வாழ்நாள் முழுவதும் தொடரும். அது என்ன?

6. என்னால் உங்களுக்கு வியர்க்கும்.நீங்கள் பலவீனமாவீர்கள். நான் உங்கள் இதயத் துடிப்பை அதிகரிப்பேன். நான் யார்?

7. அதற்கு கைகள் உண்டு, ஆனால் எதையும் பிடிக்க முடியாது; பற்கள் உண்டு, ஆனால் கடிக்க முடியாது; கண்கள் உண்டு, ஆனால் பார்வை கிடையாது. அது என்ன?

8. என்னால் ஓட முடியும், ஆனால் நடக்க முடியாது; எப்போதாவது பாடுவேன், ஆனால் பேச முடியாது; கைகள் உண்டு, ஆனால் விரல்கள் கிடையாது; தலையில்லை, ஆனால் முகம் உண்டு; நான் யார் தெரியுமா?

9. இங்கு பாதைகள் உண்டு, ஆனால் வாகனங்கள் செல்ல முடியாது; இங்கு காடுகள் உண்டு, ஆனால் மரங்கள் இருக்காது. அது எங்கே?

10. எனக்கு நாக்கில்லை, ஆனால் நான் பேசுவேன். உலகில் உள்ள அனைத்து விஷயங்களைப் பற்றியும் எனக்குத் தெரியும். எனக்கு கை, கால் கிடையாது, ஆனால் மேலாடை உண்டு. என்னை யார் என்று தெரிகிறதா?

விடைகள் :

1. 11 மணி நேரம் + 2 மணி நேரம் = 1 மணி
2. கால் தடங்கள்
3. சோப்
4. ஒரு முறைதான் (அதற்குப் பிறகு அது இருபதாகிவிடுமே)
5. நினைவுகள்
6. பயம்
7. பொம்மை
8. கடிகாரம்
9. வரைபடம்
10. புத்தகம்
Category: புதிர்கள் / பழமொழிகள் | Date: 2009-07-09
Views: 2650
Vote please
|
Total comments: 0
Name *:
Email *:
Code *: