Thursday, 2024-11-28, 5:40 PM
Welcome Guest | RSS
தமிழ் கல்வி
Section categories
ஆங்கில பாடப் பயிற்சி [5]
ஆங்கிலம் துணுக்குகள் [5]
ஆங்கிலம் ஆக்கங்கள் [0]
Statistics

Total online: 1
Guests: 1
Users: 0
Login form
Search
Main » Articles » ஆங்கிலம் கல்வி » ஆங்கிலம் துணுக்குகள்

ஆங்கிலம் துணுக்குகள் 5 (Grammatical Person in English)
எனக்கும் எனது நண்பனுக்கும் சிறிய வாய்த்தர்க்கம் ஏற்பட்டு சில நாட்கள் ஆகின்றது. நான் அதை மறந்தும் விட்டேன். ஆனால் என் நண்பனோ இதை எமது சக பணியாளர் சர்மிலனிடம் கூறிக்கொண்டிருந்தான்.

அப்போது நான் அவனிடம் கேட்டேன்.

எனக்கும் உனக்கும் தான் பிரச்சினை, இதை ஏன் சர்மிலனிடம் கூறிக்கொண்டிருக்கின்றாய்?

நண்பன் இவ்வாறு பதிலளித்தான். சர்மிலன் நமது இருவருக்குமே நண்பன் அதனால் தான் அவனிடம் கூறினேன். இதை தவிர நான் என் காதலியிடமோ, வேறு எந்தக் கழுதையிடமோ கூட கூறவில்லை என்றான் சற்றுக் கடுகடுப்பாக.

நான் இவ்வாறு பதிலளித்தேன்.

இதோ பார்! இது நீயும் நானும் மட்டுமே சம்பந்தப்பட்டப் பிரச்சினை. இது வேறு எந்த மூன்றாம் நபருக்கும் தேவையற்ற விடயம். சர்மிலன் நமது இருவருக்குமே நண்பர் என்றாலும் அவரும் இப்பிரச்சினையில் மூன்றாம் நபர்தான். அதேப்போன்றே உன் காதலியும், கழுதையும் கூட மூன்றாம் நபர்கள் தான்.

அப்படியானால் முதலாம் நபர் யார்?

நான் - முதலாம் நபர்.

நீ - இரண்டாம் நபர்.

சர்மிலன், காதலி, கழுதை - மூன்றாம் நபர்.

இப்பொழுது விளங்குகின்றதா? இது ஒரு உதாரணக் கதை மட்டுமேயாகும்.

SINGULAR - ஒருமை

I – நான் (First Person Singular – முதலாம் நபர்)

You – நீ (Second Person Singular – இரண்டாம் நபர்)

He, She, It - அவன், அவள், அது (Third Person Singular – மூன்றாம் நபர்)

PLURAL - பன்மை

We – நாம்/ நாங்கள் (First Person Plural – முதலாம் நபர் பன்மை)

You – நீங்கள் (Second Person Plural – இரண்டாம் நபர் பன்மை)

They – அவர்கள் (Third Person Plural மூன்றாம் நபர் பன்மை)

மின்னஞ்சல் ஊடாக கணேசன் என்பவர் “Third Person Singular, Second Person Singular” என்று எழுதியிருப்பது விளங்கவில்லை என்று வினவியிருந்தார். அவருக்கான பதிலையே இன்றைய ஆங்கிலம் துணுக்குகளில் பாடமாக தந்துள்ளோம். இப்பாடம் கணேசன் உற்பட எல்லோருக்கும் விளங்கக்கூடியாதாக இருக்கும் என்று நம்புகிறேன்.
Category: ஆங்கிலம் துணுக்குகள் | Date: 2009-06-09
Views: 960
Vote please
|
Total comments: 0