கல்வி என்பது மனிதனுக்கு அறிவூட்டும் ஒளிவிளக்குப் போன்றது. மனிதரிடத்துள்ள
அறியாமையைப் போக்கி நல்வழி காட்டவல்லது. கற்றறிந்தவனே கண்ணுடையவனாகக் கருதப்படுவான்.
கல்வி அறிவில்லாதவன் கண்கள் இருந்தும் கண்ணிருந்தும் குருடனாக கருதப்படுவான்.
கண்ணுடைய ரென்பர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையார் கல்லாதவர் என்கிறது திருக்குறள். எனவே, மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும் கற்க வேண்டியவற்றைக் கற்று கற்ற நெறிப்படி ஒழுகுதல் வேண்டும். இதனையே திருவள்ளுவரும் ‘கற்க கசடரக் கற்பவை கற்றபின் நிற்க அதற்கு தக’ என்கிறார். கற்க வேண்டியவற்றை கற்கும் பருவத்திலேயே நாம் கற்க வேண்டும். |